உ.பி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது 
தற்போதைய செய்திகள்

உ.பி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர் கைது

உ.பி.யின் முசாபர்நகரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார் .

PTI

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்ட கிராமத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

அந்தச் சிறுமி காணாமல் போனதாக அவரது  குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் உடல் அருகிலுள்ள கரும்புக் காட்டில் இருந்து மீட்கப்பட்டது.

இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆஷிஷ் பிரதாப் கூறுகையில்,

இந்த குற்ரத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சார்ந்த சுனில் குமார் (வயது 22). இவர் வியாழக்கிழமை இரவு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு கரும்புக் காட்டிற்குள் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார் என பிரதாப் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

மக்களுக்கும் திமுகவிற்கும் இருக்கும் நெருக்கம் சிலரைத் தூங்கவிடாமல் செய்கிறது - M.K. Stalin

நிலவு தூங்கும் நேரம்… நினைவு தூங்கவில்லை… ஐஸ்வர்யா சர்மா!

SCROLL FOR NEXT