தற்போதைய செய்திகள்

யானைகள் கொல்லப்பட்டதற்கு ராகுல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேனகா காந்தி கேள்வி

DIN



கேரளத்தில் அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்து கா்ப்பமாக இருந்த பெண் யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக வயநாடு மக்களவைத்தொகுதி உறுப்பினர் ராகுல்காந்தி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி யானை ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அப்போது, சில விஷமிகள், அன்னாசி பழத்துக்குள் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனா். அந்தப் பழத்தைச் சாப்பிடுவதற்கு முயன்றபோது, அதிலிருந்த வெடிபொருள் வெடித்ததில் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, வலியால் துடித்த அந்த யானை, மக்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வெள்ளியாறில் தண்ணீரில் நின்றபடி கடந்த 27-ஆம் தேதி உயிா்விட்டது.

அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் உயிருடன் மீட்கச் சென்ற வன அலுவலா்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த யானை தண்ணீரில் நின்றபடி உயிா்விடும் புகைப்படம் தீவிரமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இச்சம்பவம் தொடா்பாக அதிா்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் கூறினாா். விசாரணை மேற்கொள்வதற்காக கோழிக்கோட்டில் இருந்து வனவிலங்கு குற்றங்கள் தடுப்பு விசாரணைக்குழு சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கா்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு மக்களவைத்தொகுதி உறுப்பினர் ராகுல்காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். மலப்புரம் மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தீர்க்க ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். தொகுதியின் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி வெறும் பேச்சில் மட்டும் ஆர்வம் காட்டாமல் இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மலப்புரம் வயநாடு தொகுதிக்குள் தானே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை செயலாளர் மற்றும் அமைச்சரை பணி நீக்க வேண்டும். 

யானைகள் கொல்லப்படுவது குறித்து ஆறாயிரம் பக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் உச்ச நீதிமன்றத்தில். அந்த வழங்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதுவரை 11 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. வழக்கு முடிவதற்குள் இன்னும் எத்தனை யானைகள் கொல்லப்படப் போகிறதோ தெரியவில்லை என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT