முகப்பு
தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதிப்பு 65,68,510; பலி 3,87,957

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:


ஜெனீவா: உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 65,68,510-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,87,957-ஆக உயா்ந்துள்ளது.  

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 லட்சத்தை கடந்துள்ளது. 

தொற்று பாதித்தோர் 29,57,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54,200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 19,01,783 பேரும், பிரேசில் 584,562 பேரும் ரஷியாவில் 432,277 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில்  ரஷியா 3-ஆவது இடத்தில் இருந்தாலும், அங்கு கரோனா பலி விவரம் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →