முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் 46,66,386 பேருக்கு கரோனா பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

நாடு முழுவதும் இதுவரை 46,66,386 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 1,42,069 பேருக்கு கரோனா

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


புதுதில்லி: நாடு முழுவதும் இதுவரை 46,66,386 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 1,42,069 பேருக்கு கரோனா பரிசோதனை  நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 9,971 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதால், நாட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,46,628-ஆக அதிகரித்துள்ளது. இதே கால அளவில் 287 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 6929-ஆக அதிகரித்துள்ளது. 5,220 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 1,20,406 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,19,293 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

தொற்று அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 82,968 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 46,66,386 பேரின் ரத்த மாதிரிகள் கரோனா தொற்றுக்காக பரிசோதிக்கபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,42,069 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.