தற்போதைய செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

DIN


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோயில் முன்பு கோவில்களை திறக்கக் கோரி ஒற்றைக் காலில் நின்று  இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்.

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. அன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள், இந்து கோவில்கள் மூடப்பட்டு ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதியளிக்கப்பட்டன. அன்று முதல் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதோடு கோவில்களில் பக்தர்களும் அனுமதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு வழிபாட்டுத்தலங்களை கடந்த ஜூன் 8 திங்கள் கிழமை முதல் திறக்க அனுமதியளித்தது. ஆனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு கோயில்களை திறக்கச் சொல்லி இந்து முன்னணியினர் புதன்கிழமை நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட  செயலாளர் சிவப்புழ் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல் மேட்டுப்பாளையம் பத்திகாளியம்மன் கோவில், சிறுமுகை ஆஞ்சநேயர் கோயில், காரமடை குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT