தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்துக்குப்பிறகு அரசு பேருந்துகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்துக்குப்பிறகு அரசு பேருந்துகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து தனியார் பேருந்துகள் இயக்கம் இன்று புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளன. 

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் முக்கிய வழித்தடங்களில் மட்டும் புறநகர் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளன.

விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் கடலூர் திருக்கோயிலூர் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பிரதான சாலைகள் மட்டும் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளன.

பயணிகள் வரத்தைப் பொறுத்து மீதமுள்ள பேருந்துகள் இயக்கப்படும் என தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 250 பேருந்துகள் மேல் உள்ள நிலையில் முதல் நாளில் 100 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT