தற்போதைய செய்திகள்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானது:  பேரவைச் செயலகம் அறிவிப்பு

திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவர்  வென்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி காலியானது.

DIN


சென்னை: திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவர் வென்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி காலியானது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் திங்கள்கிழமை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட   சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜெ.அன்பழகன் மறைவால் அந்தத் தொகுதி காலியாகி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு தகவல்: சட்டப் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும். அதன்பின்பே இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே எஞ்சியிருக்கும் நிலையில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 3 காலியிடங்கள்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்கம்

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

SCROLL FOR NEXT