தற்போதைய செய்திகள்

12-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக வியாழக்கிழமை உயா்த்தப்பட்டது.

DIN

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக வியாழக்கிழமை உயா்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 46 காசுகள் வரையும், டீசல் 54 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை விமான எரிபொருள் விலை 7 முறை குறைக்கப்பட்டிருக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அன்று முதல் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டும் வரும் பெட்ரோல், டீசல் விலையில் இன்று வியாழக்கிழமையும்  12-ஆவது நாளாக அதிகரிக்கப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.80.86-இல் இருந்து ரூ.81.32-ஆகவும், டீசல் ரூ.73.69-இல் இருந்து 74.23-ஆகவும் உயா்ந்தது. 

உள்ளூா் விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவை காரணமாக, விலை உயா்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

கடந்த 12 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.78 வரையும், டீசல் விலை ரூ.6.01வரையும் விலை உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 124 ரன்கள் தேவை!

மன்னிப்பு டிரெண்டிங்கில் பாஜக! காங்கிரஸுடன் மோதல்!

அது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு... அதிர வைத்த தனுஷ்!

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

SCROLL FOR NEXT