முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலி 

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பகிர்:


விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், வானூர் அடுத்த தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், அரியலூர் திருக்கையைச் சேர்ந்த அண்மையில் உயிரிழந்த இளைஞரின் தாயார், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 -ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தெரிகிறது.

Advertisement

மாவட்டத்தில் இதுவரை 551 பேருக்கு கரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments