தேனி அருகே விபத்தில் 2 பேர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
தர்மாபுரியில் அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மாபுரியில் அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி அருகே தர்மாபுரியைச் சேர்ந்தவர் மலைச்சாமி(40). கோட்டூரைச் சேர்ந்தவர் மார்ட்டின்(20). இவர்கள், தர்மாபுரியில் பூமலைக்குண்டு-மல்லையகவுண்டன்பட்டி சாலையில் உள்ள அரசு மதுக் கடைக்கு தனித் தனியே இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.
மதுக் கடையிலிருந்து திரும்பும் போது, இவர்களது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த 2 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, தர்மாபுரியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள அரசு மதுக் கடையை மூட வலியுறுத்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.