தற்போதைய செய்திகள்

இளையான்குடி அருகே மின்னல் தாக்கி பெண் பலி

இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி பெண் பலியானார். 

DIN

இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி பெண் பலியானார். 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் புழுக்கம் தாங்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந் நிலையில் திடீரென ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து சாரல் விழத்தொடங்கி பின்னர் பலத்த மழையாக மாறியது. 

இந்த மழையால் இளையான்குடி பகுதியில் குளிர்ச்சி நிலவியது. வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழை இதமாக இருந்தது. இதற்கிடையில் இளையான்குடி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் சேதுராஜ் மனைவி பாலாமணி(42) இப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். 

அப்போது மின்னல் தாக்கியதில் பாலாமணி மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT