தற்போதைய செய்திகள்

கரோனா பொது முடக்கம்: வெறிச்சோடியது மதுரை

DIN


மதுரை:   கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக மதுரை மாநகரம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

 கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் அனைத்து கிராம ஊராட்சிகளில் முழுமையான பொது முடக்கம் புதன்கிழமை முதல் 30 -ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோரிப்பாளையம்

பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததையடுத்து மதுரை மாநகரச் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம்

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை கடைகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன.

செல்லூர் மேம்பாலம்

வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை வரக்கூடிய பேருந்துகள் பொது முடக்கம் அமலில் இருக்கும் பகுதி எல்லைகளுக்கு வெளியே மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரை நகருக்குள் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் வைகை ஆற்றின் தரைப் பாலங்கள், செல்லூர் மேம்பாலம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT