தற்போதைய செய்திகள்

மக்களை காப்பாற்றுவதில் ராணுவீரரை போல முதல்வர் களத்தில் பணியாற்றுகிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

DIN


சென்னை: மக்களை காப்பாற்றுவதில் ராணுவீரரை போல முதல்வர் களத்தில் பணியாற்றுகிறார் என்றும் குறைசொல்வதும், குழப்புவதும், அதற்கு காரணம் கற்பிப்பதும் எளிது, ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இதிலிருந்து மீண்டு வந்த பின் விவாதம் இருக்க வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் வழங்கிய பல்வேறு அறிவுரைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறதாகவும், திரு.வி.க. மண்டலத்தில் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு தாக்கம் குறைந்துள்ளது அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது.

வீடுகளில் தனிமை படுத்துப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர், ஆரம்ப நிலையிலேயே இந்த நோய்தொற்றை கண்டறியும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குடிசை மாற்று வாரிய சிறப்பு பிரிவில் சுடு தண்ணீர் வசதி, பொழுதுபோக்கிற்காக ஒலிப்பெருக்கி, தொலைக்காட்சி, காலிங் பெல், சிசிடிவி என பல்வேறு வசதி உள்ளது. மேலும் 4 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.

அரசு மற்றும் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

குறைசொல்வது, குழப்புவது, அதற்கு காரணம் கற்பிப்பது எளிது, ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இதிலிருந்து மீண்டு வந்த பின் விவாதம் இருக்க வேண்டும்.

இப்போது கொரோனா ஏற்படுத்தி வரும் சாவல்களை வெல்ல ஊக்கம் தர வேண்டும், களத்தில் பணியாற்றி வருபவர்களை ஊக்குவிப்பது தான் தற்போது அவசியமான ஒன்று, அறிக்கைகள் அரசியலை இதிலிருந்து மீண்டு வந்த பின் வைத்து கொள்வது தான் சரி.

மக்களை காப்பாற்றுவதில் ராணுவீரரை போல முதல்வர் களத்தில் நின்று பணியாற்றி வருகிறார் என்றார்.

30 ஆம் தேதி வரை ஊரடங்கு உள்ளது, அதே சமயம் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது,  அப்படி வழங்கப்படும் தளர்வுகளை முறையாக பின்பற்றாத அறிக்கை கொடுக்கும் மாவட்டங்கில் முழு ஊரடங்கு அமல்படுத்துப்படும் நிலை உள்ளது.

மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊரடங்கை முறையாக நடைமுறைபடுத்தவும், தேவையின்றி மக்கள் வெளியில் வருவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சாத்தங்குளத்தில் இருவர் உயிரிழப்பு  தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது, உண்மை வெளிவரும் போது தவறு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT