தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN


சென்னையில் புதன்கிழமை (ஜூன் 24), பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.04 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.77 ஆகவும்  நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை குறைந்து அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

அதனால், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 6-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயா்த்தி வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 17-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உயா்த்தப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் தொடர்கின்றன. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.77 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. 

ஜூன் 7 முதல் ஜூன் 23 வரை சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.8.55 விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா பொதுமுடக்கம் காலத்தில் அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையை தொடா்ச்சியாக ஏற்றி வருவது நாடு முழுவதும் எதிரிப்பு கிளம்பிய நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் தொடர்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT