முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு மாவட்ட சோதனை சாவடிகளில் இ-பாஸ் இன்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்        
பகிர்:

ஈரோடு: தமிழகத்தில் தற்போது கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பொது போக்குவரத்து சேவை மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலத்திற்குள் பொதுப் போக்குவரத்து சேவை நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் சமீபகாலமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் மீண்டும் தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.  இதையொட்டி புதன்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  இதில் கரோனவைரஸ் கட்டுபடுத்தும் வகையில் மாவட்டத்தை விட்டு மாவட்டம் பொது போக்குவரத்து சேவையை வரும் 30- ஆம் தேதி வரை  நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டது.  

இதைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் பொது போக்குவரத்திற்கு வரும் 30 -ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் அறிவித்தார். மேலும் இ-பாஸ் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.  இந்த நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.  

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறிவிப்பு வந்தவுடன் நள்ளிரவு முதலே பிற மாவட்ட இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இ - பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.  மருத்துவம், காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்  சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு  வருகிறது.  அதேசமயம் அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் டாக்டர்கள் போன்றோரும் வரும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.  

அதேநேரத்தில் பாஸ் இன்றி வரும் மோட்டார் சைக்கிள் கூட உள்ளே அனுமதிக்கவில்லை. கருங்கல்பாளையம் சோதனை சாவடி பொருத்தவரை நாமக்கல் பள்ளிபாளையம் குமாரபாளையம் சேலம் போன்ற வெளி மாவட்ட இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வரும் வியாழக்கிழமை அந்த வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன.  சில வாகன ஓட்டிகள் காவல்ரகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள் அனைத்தும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் பிற மாவட்டத்தில் இருந்து வேலை பார்க்கும் தனியார் ஊழியர்கள் மிகவும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் சோதனை சாவடியில் இருந்து நடந்தே சென்றனர்.  

இதேபோன்று நொய்யல் ஆற்று சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.  இங்கிருந்து கரூர் மதுரை திருநெல்வேலி திருச்சி நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அதிகளவு சென்று வரும். இதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர் இருந்த வாகனங்கள் அனைத்தும் விஜயமங்கலம் சோதனைச்சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. எல்லாம் சோதனைச் சாவடிகளிலும் வாகன ஓட்டிகள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதேசமயம் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் உரிய சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →