செங்கல்பட்டில் 147 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.
வியாழக்கிழமை இரவு வரை 3,779 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 197 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3976-ஆக உயா்ந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, புதிதாக மேலும் 147 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது.