தற்போதைய செய்திகள்

சென்னையிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

DIN


சென்னை: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை ரயில் நிலையங்களில் ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ 10 -இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து அதிக அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் வருகிற பயணிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையை தவிர்க்கும் விதமாக சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள் என கருதப்படும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 ரயில் நிலையங்களில் தற்போதுள்ள ரூ.10  நடைமேடை அனுமதி (பிளாட்ஃபார்ம்) கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய கட்டண முறை மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்பதால் பயணிகள் இந்த கட்டண உயர்வுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT