தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்புப் பணி: வேலூர் திமுக எம்பி ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு: துரைமுருகன் ரூ.50 லட்சம் அளிப்பு

கரோனா தடுப்புப் பணிகளுக்காக வேலூர் திமுக எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், தனது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

DIN

வேலூர்: கரோனா தடுப்புப் பணிகளுக்காக வேலூர் திமுக எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், தனது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதேபோல், முன்னாள் அமைச்சரும், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினரான துரைமுருகன் தனது பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில், தமிழகத்தில் பரவிவரும் கரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேலும், அதற்கு தேவையான மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கிடும் வகையில் வேலூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்திட பரிந்துரைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், முன்னாள் அமைச்சரும், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான துரைமுருகன் தனது பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பரிந்துரைக் கடிதத்தையும் அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT