தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்குகிறது

DIN


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு  (கொவைட்-19) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,63,748 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இரண்டு நாள்களுக்கு முன்னா் 5 லட்சத்தைக் கடந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் நோய்த்தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்ததையடுத்து, அந்த நாடு உலகிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக ஆனது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மேலும் பலருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6 லட்சத்து 63 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. 

சனிக்கிழமை மாலை நிலவரப்படி உலகின் 180 நாடுகளில் 6,19,457 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. 

மேலும், அந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 28,388-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 30 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT