தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்ப 1,50,000 போ் பதிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்புவதற்கு சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 1,50,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா்.

DIN

அபுதாபி:  ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்புவதற்கு சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 1,50,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கேரளத்தினர். 

இது குறித்து துபையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி விபுல் கூறியதாவது:

சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 1,50,000-க்கும் மேற்பட்டோா் இந்தியா திரும்புவதற்கு முன்பதிவு செய்துள்ளனா். அவர்களில் கால் பகுதியினர் கரோனாவால் வேலை இழந்துள்ளதால் தாயகம் திரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

முன்பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தொழிலாளர்கள், 20 சதவீதம் பேர் தொழில் வல்லுநர்கள். ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளதால் நாட்டை விட்டு தாயகம் திரும்புதவதாக குறிப்பிட்டுள்ளனர். முன்பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள், இந்தியாவில் விமான சேவை மற்றும் ஊரடங்கால் சிக்கித் தவிப்பவர்கள். மீதமுள்ளவர்களில் மருத்துவ அவசரநிலை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர் என்று விபுல் கூறினார். 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குத் திரும்ப பதிவுசெய்துள்ள இந்தியர்களில், 50 சதவீதம் பேர் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கேரளத்தினர். 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை விமானத்தில் தாயகத்துக்கு அழைத்துச் செல்வதற்கான முறை, விமான டிக்கெட் விலை, பயணத்திற்கான கரோனா தொற்று சோதனை முடிவு மதிப்பீடு போன்றவை குறித்து இதுவரை இந்திய அரசிடம் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

"இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன, மேலும்" நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களை திருப்பி அனுப்புவது உறுதிப்படுத்தப்படும் வரை தூதரகத்தின் வலைதளப் பக்க பதிவு திறந்திருக்கும்" என்று விபுல் கூறினார்.

‘கரோனா சூழலைப் பொருத்து, வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை அழைத்து வருவது பற்றி முடிவெடுக்கப்படும்’ என்று வெளியுறவுத் துறை கூடுதல் செயலா் தம்மு ரவி கூறியிருந்தது நினைவுகூரத் தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT