தற்போதைய செய்திகள்

கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தவருக்கு 3 சிறுநீரகங்கள்: மருத்துவர்கள் ஆச்சரியம்

கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு பரிசோதனையில் 3 சிறுநீரகங்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

DIN



கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு பரிசோதனையில் 3 சிறுநீரகங்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

பிரேசிலை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் தினமும் கடுமையான முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து தனக்கு இருக்கும் கடுமையான முதுகுவலி குறித்து கூறியுள்ளார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது முதுகு பகுதியை சி.டி ஸ்கேன் செய்து வருமாறு பரிந்துரைந்துள்ளனர். பின்னர் அவரது சிடி ஸ்கேன் அறிக்கையை  பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஏனெனில் அந்த மனிதருக்கு பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது போல இரண்டு சிறுநீரகங்கள் இல்லை, அதற்கு பதிலாக, அவருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருந்துள்ளது. மனிதருக்கு இரண்டு சிறுநீரகங்கள் அருகருகேயும், மற்றொரு சிறுநீரகத்திற்கும் சற்று மேலே முதுகெலும்புகளுக்கு இடையில் ஒரு குஷன் போன்று இருந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அவருக்கு சிறுநீரக கோளாறு இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு சிறுநீரக கோளாறு எதுவும் இல்லை என்பதும் அவரது உறுப்புகள் சாதாரணமாக செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: பொதுவாக, ஒவ்வொரு சிறுநீரகமும் சிறுநீர்ப்பையுடன் யூரிட்டர் எனப்படும் ஒற்றை குழாய் வழியாக இணைக்கப்படுகிறது. இந்த மனிதரின் விஷயத்தில், இடுப்பு சிறுநீரகங்களில் ஒன்று சிறுநீர்ப்பை மூலம் சிறுநீர்ப்பை வழியாக நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று இடுப்பு சிறுநீரகத்தின் சிறுநீர்ப்பை சிறுநீர்ப்பைக்குள் நுழைவதற்கு முன்பு இடது புறத்தில் உள்ள சாதாரண சிறுநீரகத்தின் சிறுநீர்க்குழாயில் இணைந்துள்ளது. 

"கரு வளரும்போதே இதுபோன்று 3 சிறுநீரகம் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மிகவும் அரிதாகவே இதுபோன்று இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.

கூடுதல் சிறுநீரகம் உள்ளதால் அந்த மனிதருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை. இருப்பினும், அவரது முதுகுவலிக்கு வாய்வழி வலி நிவாரணி மருந்துகளை மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைத்து எழுதி கொடுத்துள்ளனர். 

மூன்று சிறுநீரகங்கள் இருப்பது ஒரு அரிய நிலை. மருத்துவ வரலாற்றில் 100க்கும் குறைவானவர்களுக்கே மூன்று சிறுநீரகங்கள் இருப்பதாக,  2013 ஆம் ஆண்டு தி இண்டர்நெட் ஜர்னல் ஆஃப் ரேடியாலஜியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் செவிலியா்கள் தா்னா

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT