நடிகர் விஜய் 
தற்போதைய செய்திகள்

தந்தையின் கட்சியில் சேர வேண்டாம்: நடிகர் விஜய்

என் தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் என் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

DIN

என் தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் என் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வியாழக்கிழமை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக தகவல் வெளியானது. 

இதையடுத்து நடிகர் விஜய் வெளியிட்ட மறுப்பு செய்தியில்,

என் தந்தை ஆரம்பித்த கட்சியைப் பற்றி நான் அறிந்தேன். எனக்கும் அவர் ஆரம்பித்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டாம்.

கட்சிக்கு என் பெயரையோ, புகைப்படத்தையோ உபயோகப் படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கியது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வனப் பகுதியில் பட்டாசு வெடிக்க தடை! வனத் துறை அறிவிப்பு!

‘ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளில் 804 காட்டு யானைகள் உள்ளன’

அரிவாளுடன் நின்றிருந்த இளைஞா் கைது

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அம்பையில் நலிந்தோருக்கு புத்தாடைகள் அளிப்பு

SCROLL FOR NEXT