முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பள்ளிகள் திறக்க டிச.31 வரை தடை

ஒடிசாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 31 வரை திறக்கத் தடை விதித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2020 at 9:09 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 31 வரை திறக்கத் தடைவிதித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,

ஒடிசா மாநிலம் முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொலைதூராக் கல்வி முறையை தொடரவேண்டும்.

Advertisement

மேலும், கட்டுப்பாடு மண்டலத்திற்கு வெளியே உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பள்ளிகள் திறக்கத் தடை இல்லை.

இணைய கற்பித்தலுக்கு ஆசிரியர்களும், மற்ற வேலைகளுக்கு பணியாளர்களும் பள்ளிகளுக்கு அழைக்கப்படலாம்.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.