அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் 2 ஆம் நாளாகத் தொடர்மழை
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 ஆம் நாளாக வியாழக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் தொடர்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 ஆம் நாளாக வியாழக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் தொடர்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு(அதிகாலை) முதல் இடைவிடாமல் தொடர்மழை பெய்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அருப்புக்கோட்டையில் 31 மி.மீ மழையும் திருச்சுழியில் 66 மி.மீ மழையும்,கோவிலாங்குளத்தில் 38.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடிவரையிலான பல்வேறு கிராமங்களில் பெருவாரியான விவசாயிகள் தற்போது வாழை,உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்து வருவதால் மகசூல் பெருகுமெனவும்,தொடர்மழை காரணமாக நிலத்தில் நல்ல ஈரம் பாய்ந்துள்ளதால்,தை மாத அறுவடைக்குக் கிடைக்கும் விதமாக அடுத்தக்கட்ட சாகுபடிக்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.