ஆம்பூரில் லாரிகள் மோதல்: இருவர் சாவு
ஆம்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை லாரிகள் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆம்பூர்: ஆம்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை லாரிகள் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை ஏற்றி வந்த லாரி பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து பெல்காம் பகுதிக்கு பார்சல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், குண்டூர் கிழ்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலையா(45). மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த கோபால் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.