11 மாநில இடைத்தேர்தல்கள்: நாளை வாக்கு எண்ணிக்கை
நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் காலியாக இருந்த 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியும், மணிப்பூரில் காலியாக இருந்த 2 தொகுதிகளுக்கு நவம்பர் 7 ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனிடையே பிகார் சட்டபேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது, மேலும் பிகாரில் காலியாக இருந்த ஒரு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 7ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது நாளை (நவம்பர் 10) நடைபெற உள்ளது.
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.