செங்கல்பட்டில் வேல் யாத்திரை செல்லமுயன்ற முருகன் உள்பட 945பேர் கைது
செங்கல்பட்டில் இருந்து வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்பட 945 பேரை காவல்துறை கைது செய்தனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்பட 945 பேரை காவல்துறை கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி தடையை மீறி திருத்தணியில் யாத்திரை செல்ல முயன்ற மாநிலத் தலைவர் உள்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர் இதனைத்தொடர்ந்து யாத்திரை பயணத்தை வெற்றிகரமாக முடிக்க தீருவோம் என்ற குறிக்கோளோடு பாஜகவினர் ஒவ்வொரு இடமாக வேல் யாத்திரை பயணத்தை தடையை மீறி தொடங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை செங்கல்பட்டில் யாத்திரை பொதுக்கூட்டம் மற்றும் யாத்திரை புறப்பாடு நடைபெறுவதாக இருந்ததை ஒட்டி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நாகராஜ் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் தே கண்ணன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒன்றாம் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் விடியற்காலை முதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
இதனை அடுத்து பாஜகவினர் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் குவிய தொடங்கினர் மாநிலத் தலைவர் முருகன் வந்தவுடன் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள விநாயகர் கோயிலில் தமிழ் கடவுள் முருகனுக்கு பூஜைகள் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மேடையில் பேசிய மாநில தலைவர் முருகன் பொதுமக்கள் இடத்திலேயே தமிழ் வேறு ஆன்மிகம் வேறு என போலி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்துக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பாஜக முன்னால் நிற்கும் எனவும் திருக்குறளிலும் ஆதிபகவன் என முதலெழுத்து உள்ளதாகவும் இந்துக்களுக்கு கடவுள் என்றால் தமிழர்களுக்கு எதிரி என்கிற மாய பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் அவமானப்படுத்தியபோது அதனை யாரும் தட்டிக் கேட்கவில்லை எனவும் ஆனால் பாரதிய ஜனதா கட்சி அதனை தட்டிக் கேட்டதாகவும் பேசினார்.
மேலும் ஸ்டாலின் அவர்கள் கருப்பர் கூட்டத்தில் பின்னாலிருந்து இயக்குவதாகவும் கருப்பர் கூட்டத்தை இயக்குவது திமுக தலைவர் ஸ்டாலின் என குற்றம்சாட்டினார். திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உள்ளது. ஆனால் பாஜகவிற்கு அனுமதி மறுக்கப் படுவதாகவும் தேசிய அரசியலும் தெய்வீக அரசியலும் வருகிற நேரம் நெருங்கி விட்டதாகவும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து யாத்திரை செல்ல முயன்ற முருகன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நரேந்திரன், மாநில செயலாளர் கே டி ராகவன், மாவட்ட தலைவர் பலராமன், பிரகாஷ், பாஸ்கர், விஜி, உள்ளிட்ட 945 பேரை காவல்துறையினர், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைது செய்து வைக்கப்பட்டனர்.