தற்போதைய செய்திகள்

ஆன்லைன் ரம்மி: உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைகோரிய வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கூறியதாவது,

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்?, சட்டமாக இயற்றப்படுமா?, விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை அரசு தரப்பிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய அதிக முக்கியத்துவடன் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவம்பர் 24ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT