முகப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தையைக் கடத்திய மருத்துவர் உள்பட 3 பேர் கைது

நான்கு மாத குழந்தையை கடத்திய வழக்கில் மருத்துவர் உள்பட 3 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
கோப்புப்படம்
பகிர்:

நான்கு மாத குழந்தையை கடத்திய வழக்கில் மருத்துவர் உள்பட 3 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளனர்.

மும்பை ஜுஹு குடிசைப் பகுதியில் சாலையோரம் இருந்த குழந்தை நவம்பர் 11ஆம் தேதி கடத்தப்பட்டது.

அந்தக் குழந்தையை கண்டுபிடிக்க 25 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டும், அப்பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராயப்பட்டது.

இதில், தெலங்கானாவைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் என்ற மருத்துவர் அந்த குழந்தையை கடத்தி தெலங்கானாவில் உள்ள ஒரு தம்பதியரிடம் ரூ. 4 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து, மருத்துவர் உள்பட கடத்தலில் சமந்தப்பட்ட 3 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →