லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் 
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதா இந்தியா?: லெப்டினன்ட் ஜெனரல் விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்து போலியானவை என லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

DIN

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி போலியானவை என லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்திலுள்ள ஹரிநகர் பகுதியில் வியாழக்கிழமை பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி வீடுகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் நக்ரோட்டா மாவட்டத்திலுள்ள பான் சோதனைச் சாவடியில் இருந்த 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துல்லியத் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் பரவி வருகின்றது.

இதனையடுத்து இந்திய ராணுவ இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் வெளியிட்ட செய்தியில்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்து போலியானவை என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT