ஓசூரில் இந்து மகாசபா நிர்வாகி வெட்டிக் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மகாசபா மாநிலச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மகாசபா மாநிலச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ஓசூர், அனுமந்த நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ்(45). இவர், இந்து மகாசபா என்ற அமைப்பின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் தனது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், நாகராஜை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
Advertisement
இது குறித்து தகவலறிந்த ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளா் முரளி, மேலூா் ஓசூர் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.