தற்போதைய செய்திகள்

ஹிமாச்சலில் டிச.31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை

ANI

ஹிமாச்சலப் பிரதேசத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் தளர்வையடுத்து பல மாநிலங்கள் படிப்படியாக பள்ளிகளை திறந்து வருகின்றனர்.

இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனா தொற்று பாதிக்கப்படுகிறார்கள்.

இதனையடுத்து, ஹிமாச்சல் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் எனவும், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிர்காலத்தில் மூடப்படும் பள்ளிகள் பிப்ரவரி 12, 2021 வரை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT