ஹரியாணாவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பறிமுதல்
ஹரியாணாவில் தடை செய்யப்பட்ட 74,400 மருந்துகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹரியாணாவில் தடை செய்யப்பட்ட 74,400 மருந்துகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹரியாணாவின் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்துவக் கிடங்கில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 74,400 மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, போதை மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்