நாகர்கோவிலில் அதிமுக எம்.பி. வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.விஜயகுமார் வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.விஜயகுமார் வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஏ.விஜயகுமார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் மேற்கு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை விஜயகுமாரின் வீட்டின் முன்பு சாலை ஓரத்தில் பந்து போன்ற உருண்டை வடிவில் மர்ம பொருள் கிடப்பதை பார்த்த விஜயகுமார் எம்.பி.யின் கார் ஓட்டுநர் ரிஜூ அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement
இதைத் தொடர்ந்து அங்கு வந்த நேசமணி நகர் காவலர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பொருளைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ஐஸ்கிரீம் பந்தில் வெடிமருந்தை நிரப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த வெடிகுண்டு பந்தை வீசிச் சென்றது யார் என்பது குறித்து நேசமணி நகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதிமுக எம்.பி.யின்வீட்டு முன்பு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.