முகப்பு
தற்போதைய செய்திகள்

போபாலில் குத்திக் கொலை செய்யப்பட்ட 2 நாள்களே ஆன பெண் குழந்தை

மத்திய பிரதேசத்தில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.

Updated On : 1 அக்டோபர், 2020 at 4:53 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:58 PM

மத்திய பிரதேசத்தில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.

போபாலின் அயோத்தி நகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகில் துணியால் சுத்தி மூடப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் உடலை பொதுமக்கள் கண்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல்  முழுவதும் காயங்களுடன் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இருப்பினும், காவல்துறையினர், ஆரம்பத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையை யாரோ கோவிலுக்கு அருகில் விட்டுவிட்டு, விலங்குகள் குழந்தையை கடித்திருக்கலாம் என நினைத்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனை முடிவில், பிறந்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையை கூர்மையான ஆயுதத்தால் சுமார் 100 க்கும் மேற்பட்ட முறை குத்திக் கொன்றுள்ளதாக தெரிவித்தனர்,

இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போபால் நகரில் கடந்த 2 வாரத்தில் 3 குழந்தைகளின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.