முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்ராயன் நினைவு தின விழா

திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர். சுப்ராயன் நினைவு நாள் விழா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றம் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
திருச்செங்கோடில் நடைபெற்ற சுப்ராயன் நினைவு நாள் விழாவில் பங்கேற்றோர்
பகிர்:

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர். சுப்ராயன் நினைவு நாள் விழா நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றம் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள  முன்னாள் முதல்வர் சுப்பராயன் திருவுருவ சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்.செல்வக்குமார், கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் செங்குன்றம் தமிழ்ச்சங்க பொறுப்பாளர் பொன்.கோவிந்தராசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்செங்கோடு நகர தலைவர் தணிகைச் செல்வன், திருச்செங்கோடு மேற்கு வட்டார தலைவர் மூர்த்தி, மல்லசமுத்திரம் வட்டாரத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், திருச்செங்கோடு நகர பொருளாளர் செல்வராஜ், திருச்செங்கோடு நகர பொதுச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் கொங்கு வேளாளர் இளைஞர் சங்கத்தினர், கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரமுகர்கள்  சிலைக்கு பூக்களை தூவி மரியாதை செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →