பஞ்சாபில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கூலித்தொழிலாளி தற்கொலை
பஞ்சாபில் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது 3 குழந்தைகளை கொலை செய்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பஞ்சாபில் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது 3 குழந்தைகளை கொலை செய்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பதிந்தா மாவட்டம் ஹமீர்கர் கிராமத்தில் வசிப்பவர் பீந்த் சிங் (வயது 35). இவர் கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லவ்பிரீத் கவுர். இவர்களுக்கு பிரஜ்ஜோத் சிங் (7), அர்ஷ்தீப் கவுர் (3) மற்றும் குஷி (1) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் லவ்பிரீத் புற்றுநோயால் பலியானார். இதையடுத்து, மனமுடைந்த நிலையில் இருந்த பீந்த் புதன்கிழமை இரவு தனது 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்த தற்கொலை குறிப்பை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜஸ்பீர் சிங் தெரிவித்தார்.