உ.பி.யில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை : 8 மாணவர்கள் கைது
உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் கூறுகையில், ஜான்சி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சிறுமியை 8 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை மிரட்டி ரூ. 3 ஆயிரம் வாங்கியுள்ளனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளோம் என கூறினார்.