தற்போதைய செய்திகள்

கரோனா பொதுமுடக்க காலத்தில் 25 லட்சம் வழக்குகள் ஆன்லைனில் விசாரணை

PTI

இந்தியா முழுவதும் கரோனா பொதுமுடக்க காலத்தில் 25 லட்சம் வழக்குகள் இணையதளம் மூலம் விசாரிக்கப்பட்டதாக மத்திய சட்டதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் நீதி அமைச்சர்களின் இணைய மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில், கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைச்சர்களும், பாகிஸ்தானின் சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தின் பிரதிநிதியும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பேசுகையில், 

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைய-சட்ட சேவைகள் மூலம் 44 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 

கரோனா பொதுமுடக்க காலத்தில், நாடு முழுவடும் 25 லட்சம் வழக்குகள் இணையதளம் மூலம் நடத்தப்பட்டது, அதில் 9 ஆயிரம் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடத்தப்பட்டது என கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT