தற்போதைய செய்திகள்

சரிவில் இருந்து மீட்ட கம்மின்ஸ் : மும்பைக்கு 149 ரன்கள் இலக்கு

DIN

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து இயான் மோர்கன் தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக திரிபதி, கில் களமிறங்கினர்.

ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத கொல்கத்தா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

திரிபதி (7), ராணா (5), கில் (21), தினேஷ் கார்த்திக் (4), ரசல் (11) என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதையடுத்து கேப்டன் மோர்கன்-கம்மின்ஸ் ஜோடி இறுதி கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தனர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT