மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து இயான் மோர்கன் கேப்டன் பொறுப்பை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.