முகப்பு
தற்போதைய செய்திகள்

அலட்சியம் காட்டும் பாகிஸ்தான் மக்கள்: மீண்டும் பொதுமுடக்க எச்சரிக்கை

பாகிஸ்தான் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் கரோனா தொற்றை குறைக்க மீண்டும் பொதுமுடக்கம் போடப்படும் என தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு (கோப்புப்படம்)
பகிர்:

பாகிஸ்தான் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் கரோனா தொற்றை குறைக்க மீண்டும் பொதுமுடக்கம் போடப்படும் என தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 19 பேர் ஒரே நாளில் பலியானதை அடுத்து புதன்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் பொதுமுடக்கத்தை தளர்த்திய பிறகு நாள்தோறும் பலியாவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,24,744 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,692 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →