மகாராஷ்டிர வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்
மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உஸ்மானாபாத் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கட்டெகாவோ கிராமத்திற்கு சென்று விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் நேரில் கேட்டறிந்தார்.
மேலும், தாக்கரே தனது அமைச்சரவையைச் சேர்ந்த மற்ற மூத்த அமைச்சர்களுடன் சேர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து பாதிப்பைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த வாரம் நான்கு நாட்களுக்கு மேலாக பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் பல விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்தது. மேலும், 16 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.