முகப்பு
தற்போதைய செய்திகள்

வானூரில் மறியல் செய்த பாஜகவினர் கைது

விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து வானூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினர்
பகிர்:

விழுப்புரம்: விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து வானூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

வானூர் சட்டமன்றத் தொகுதி பாஜக சார்பில், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜன் தலைமையில், புதுவை சாலை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மதியம் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

பாஜக நிர்வாகிகள் 40 பேரை காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Advertisement

தேபோல் பாஜக போராட்டத்தை எதிர்ப்பதற்காக விழுப்புரத்திற்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments