முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் ஒரே குடும்பத்தில் 32 பேருக்கு கரோனா உறுதி

உத்தரபிரதேசத்தின் பண்டா நகரத்தின் பூட்டா குவான் வட்டாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
உ.பி.யில் ஒரே குடும்பத்தில் 32 பேருக்கு கரோனா உறுதி
பகிர்:

உத்தரபிரதேசத்தின் பண்டா நகரத்தின் பூட்டா குவான் வட்டாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி என்.டி.சர்மா கூறுகையில், 

பண்டா மாவட்டத்தின் பூட்டா குவான் வட்டாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேர் உள்பட இன்று 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பண்டா மாவட்டத்தில் 807 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 439 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் பண்டா மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.