முகப்பு
தற்போதைய செய்திகள்

ம.பி.யில் லாரி மீது ஜீப் மோதி விபத்து : 3 பேர் பலி, 8 பேர் காயம்

மத்திய பிரதேசத்தின் சியோன் மாவட்டத்தில் லாரி மீது ஜீப் மோதியதில் 3 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
ம.பி.யில் லாரி மீது ஜீப் மோதி விபத்து : 3 பேர் பலி, 8 பேர் காயம்
பகிர்:

மத்திய பிரதேசத்தின் சியோன் மாவட்டத்தில் லாரி மீது ஜீப் மோதியதில் 3 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.

பிகார் மாநிலம் பாங்காவிலிருந்து மகாராஷ்டிரத்தின் அமராவதிக்கு செவ்வாய்க்கிழமை 18 புலம்பெயர் தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

சியோனில் இருந்து 22 கி.மீ. தொலைவில் ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் சென்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிகாலை 4 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பாங்காவில் வசிக்கும் டப்லு குமார் தாஸ் (வயது 23), சூரஜ் தாஸ் (45) மற்றும் மித்லேஷ் தாஸ் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் உள்பட 8 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.