முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசா வெள்ளம் : 115 பேர் மீட்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோர்தா மற்றும் பூரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 115 பேரை மீட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
ஒடிசா வெள்ளம் : 115 பேர் மீட்பு
பகிர்:

ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோர்தா மற்றும் பூரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 115 பேரை மீட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிசா தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் படகுகளுடன் 8 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, கூடுதலாக 12 அணிகள் கட்டாக்கில் உள்ள ஒடிசா தியணைப்பு மற்றும் பேரிடர் நிறுவனத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

கனாஸ் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 6 மீட்புக் குழுக்கள் பூரி மாவட்டத்தின் பதல்பூர், நுவாஹாஹி, ஹல்திபாடா, படாபுட் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 62 பேரை மீட்டுள்ளனர். மேலும், பட்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவரையும் மீட்டுள்ளனர்.

கோர்தா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள குழு 50 பேரை மீட்டுள்ளனர். மேலும், மீட்புக் குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் நிவாரணப் பொருள்களை விநியோகித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →