அரியலூர் அருகே பெரியார் சிலை அவமதிப்பு
அரியலூர் அருகே வியாழக்கிழமை பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்: அரியலூர் அருகே வியாழக்கிழமை பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் அடுத்த தேளூர் ஊராட்சி சமத்துவப் புரத்தில் உள்ள மார்பளவு கொண்ட பெரியார் சிலையின் மீது தார் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை பிற்பகல் தெரியவந்தது. இதையடுத்த திராவிடர் கழகம் மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் பதற்றம் உருவானது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.