முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் கடனைச் செலுத்த முடியாததால் தற்கொலை முயற்சி

ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் ஒருவர் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
ஆந்திரத்தில் கடனைச் செலுத்த முடியாததால் தற்கொலை முயற்சி
பகிர்:

ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டத்தில் கடனைத் திரும்ப செலுத்த முடியாததால் ஒருவர் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

குண்டூர் மாவட்டம் சிலுவூரு கிராமத்தைச் சேர்ந்த சுபானி என்பவர் பலரிடமிருந்து ரூ.15 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். மேலும், அவர் பணிபுரிந்த நகைக் கடையிலும் பணமோசடி செய்துள்ளார். 

தற்போது கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்துவதால் காணொளி பதிவு செய்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து அதை அருந்தியுள்ளர். இதைக் காணொளி பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அந்தக் காணொளியைப் பார்த்த நண்பர்கள் உடனடியாக குண்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து புதன்கிழமை இரவு அவரை மீட்டு அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் தரப்படும் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்படும் என காவல்துறையினர் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →