முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் உயிருடன் புதைத்த பச்சிளம் குழந்தை மீட்பு

தெலங்கானாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆந்திர கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வனப்பகுதியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
ஆந்திரத்தில் உயிருடன் புதைத்த பச்சிளம் குழந்தை மீட்பு (கோப்புப்படம்)
பகிர்:

தெலங்கானாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆந்திர கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வனப்பகுதியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.

கிருஷ்ணவரம் கிராமத்தில் குழந்தையின் அழுகையைக் கேட்ட ஒரு பெண், மற்ற கிராமவாசிகளின் உதவியுடன் குழந்தையை ஒரு குழியிலிருந்து மீட்டார். கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீட்கப்பட்ட குழந்தையை கழுவி, அதன் வாயிலிருந்து மண்ணை அகற்றினர்.

பின், தெலங்கானாவின் எல்லையைத் தாண்டி பத்ராச்சலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது குழந்தை மருத்துவமனை ஊழியர்களின் பராமரிப்பில் குணமடைந்து வருகிறது.

கிராம மக்கள் கூறுகையில், குழந்தையை உயிருடன் புதைத்து யாரோ ஒருவர் கொல்ல முயற்சி செய்துள்ளனர், ஆனால் அவர்கள் அவசரமாக அடக்கம் செய்ய முயன்றதால் பாதி அடக்கம் செய்த நிலையில் சென்றுவிட்டனர். குழந்தை இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்திருந்தால் உயிரிழந்திருக்கும் என கூறினர்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளூர் சுகாதார மற்றும் குழந்தைகள் நலத்துறை ஊழியர்களின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →